பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை காட்டும் பாதை 13| கக்குகிறான். இங்கு அவனுடைய பொதுநிலை மறைந்து போய் விடுகிறது. மற்ற தெய்வங்களை வழிபடுவோரும் தன்னையே தொழுகிறார்கள் என்று (கீதை 9: 23) கூறுகிறவன், தேவ விரதிகள் தேவரை எய்துவர், பிதிர்க்களை நோற்போர் பிதிர்க்களை எய்துவர், பூதங்களைத் தொழுவோர் பூதங்களை எய்துவர். என்னை வேட்போர் என்னை எய்துவர் (கீதை 7. 25) என்று சேரும் இடங்களை வேறு வேறாகக் காட்டுகிறான். இது பெரிய முரண்பாடு. உலகத்துக்கெல்லாம் தானே தலைமையான கடவுள் என்று கூறிக் கொள்ளும் கண்ணன், மிகப் பெருந்தன்மையாக மற்ற மதத்தினரைப் பற்றி ஒரு கருத்துக் கூறுகிறான். இங்ங்ணம் அறியாத மற்றைப் பிறர், அன்னியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்த சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார். -கீதை 13 : 26 மற்ற மதத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்கள் தன்னை வணங்காவிட்டாலும், வேறு சுருதிகளை நம்பிப் பின்பற்றினாலும் மரண மிலாப் பெருவாழ்வு அடைவார்கள் என்று பெருந் தன்மையோடு, கூறுகிற கடவுள், தன்னுடைய மதத்திலேயே இருந்து தன்னைப் பணியாதவர் களாய் இருப்பவரைப் பற்றிக் கூறும்போது வெறுப்புத் தீயைக் கக்குகிறான்.