பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைேத காட்டும் பாதை 133 தனக்கு அன்பர்கள் என்றும் பகைவர்கள் என்றும் இரு சாராரை உருவாக்கி தன் பகைவர்களைப் பழிவாங்கும் அற்பக் குணத்துக்கு ஆளாகி நிற்பதைக் காண்கின்றோம். நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே! என்று போற்றக்கூடிய இறைவனாகக் கண்ணன் விளங்கவில்லை என்பதை இதுகாறும் கூறிய கீதை களால் அறிகிறோம். கண்ணனுடைய கடவுள் தன்மை இவ்வாறாக, சமுதாயக் கொள்கை எவ்வாறு இருக்கிறதென்று பார்த்தால் அது முற்போக்கு எண்ணத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பதையே காண் கிறோம். கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே" இந்தச் சொற்றொடர் ஒரு பொன்மொழி போலக் காட்சியளிக்கிறது. கண்ணன் இந்த மொழியில் தொடங்கித்தான் ஒரு வலையைப் பின்னுகிறான். ஒரு தொழிலைச் செய்பவன் அதன்பலன் நல்லதா கெட்டதா என்று எதிர்பார்த்துச் செய்யக் கூடாதென்றும், அதன் பலனை இறைவன் பொறுப் பாக விட்டுவிட வேண்டும் என்றும் உபதேசம் தொடர்கிறது.