பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கீதை காட்டும் பாதை தன்னலமில்லாத பணியைச் செய்யவேண்டும் என்று வற்புறுத்துவதாக நாம் இதை எடுத்துக் கொள்கிறோம். நல்ல பலன் இல்லையே என்பதற்காகத் தன் தொழிற் பணியை நிறுத்திவிடக் கூடாதென்று தொடர்ந்து சொல்லுகிறான் கண்ணன். இந்தப் பொன்மொழியும் கடமை தவறாத உணர்வை ஊட்டுகிறதென்று எண்ணிக் கொள் கிறோம். உன் கடமை என்பது என்னவென்றால், உனக்கு என்று சாஸ்திரம் ஒதுக்கியுள்ள தொழிலைச் செய்வது தான்! என்கிறான் கண்ணன். இங்கே தான் வலை இழுத்துச் சுருக்கப் படுகிறது. உன் சாதித் தொழிலைத் தான் நீ செய்ய வேண்டும். வேறு சாதிக்காரனுடைய தொழிலை நீ எவ்வளவு திறமையாகச் செய்து எவ்வளவு நல்ல பலன் பெற்றாலும் அது உன்னை நரகத்தில் தான் தள்ளும்; உன் சாதித் தொழிலைச் செய்து பலனே இல்லாமல் போனாலும் அது நன்றாகும். உன் சாதித் தொழிலைச் செய்வதன் மூலம் நீ மாண்டு போனாலும் அது நன்மைக்கே யாகும்.