பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கீதை காட்டும் பாதை இந்த அடிமைகள் அடிமைத் தொழிலையே செய்து கடைசிவரை எந்த ஆதாயமுமின்றிச் செத்து மடிவதே சிறந்ததென்று கீதையில் கண்ணன் உபதேசிக்கிறான். இப்படிச் செத்து மடிபவர்களுக்கே மோட்சம் கிடைக்கும் என்கிறான். தங்களுக்கென்று விதிக்கப்பட்ட அடிமைத் தொழிலை விட்டு மேல் சாதியாரின் தொழிலைத் திறமையுடன் செய்து மேன்மையுற்றாலும், அது பாவம் என்றும், நரகம் கிடைக்கும் என்றும் கீதைக் கண்ணன் கூறுகிறான். இவ்வாறு ஒரு பெரும் சமுதாயத்தை ஆண்டாண்டு காலமாக - யுகம் யுகமாக - மேலெழும்ப முடியாதபடி செய்வதற்கே கண்ணன் உபதேசம் பயன்படுகிறது. ஆதிசங்கரர் முதல், மத்வாச்சாரியார், இராமாநுஜசாரியார் போன்ற பெரும் சமய வாதிகள் கீதையைப் போற்றுவதையோ, விளக்கம் சொல்லு வதையோ கண்டு நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்கள் என்னதான் துறவிகளாக இருந் தாலும், பெரும் பேரும் தத்துவங்களை அறிந்தவர் களாக இருந்தாலும், சாதி யொழிந்தால் உலகமே புரண்டு விடும் என்றும், பார்ப்பனர்கள் மதிக்கப்படமாட்டார்கள் என்றும் தீவிரமான கருத்துடையவர்கள்.