பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை காட்டும் பாதை 137 அவர்கள் கண்ணன் கூறும் கருத்து நிலைத் திருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அவர்களும் அவர்கள் இனமும் என்றும் தலை நிமிர்ந்து சகல செளபாக்கியங்களுடனும் வாழ வேண்டுமானால், அடிமைத் தொண்டு செய்வதற்கென்றே ஒரு சாதி இருக்க வேண்டியது அவசியம் என்று கருது பவர்கள், அவர்கள் வருணாசிரமம் நிலைக்க வேண்டும் என்றுதான் பாடுபடுவார்கள். ஆனால் சமுதாய விடுதலையே மூச்சாக வாழ்ந்த மகாத்மா காந்தி, பாரதி போன்றவர்கள், கீதையை முழுக்கப் படித்தபிறகு, அதைப்போற்றிப் பேசுகிறார்கள் என்றால் அதைத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. உறவென்று பார்க்காதே; மனம் தளராதே; 'உன் தொழில் போர் செய்வது; உன் கடமை போர் செய்வது; நீ அதை நிறுத்தாதே; தொடர்ந்து செய் என்று கூறி ஊக்கப்படுத்திப் போர் செய்யத் தூண்டிய கண்ணன், துரியோதனாதியரை வீழ்த்துவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையைச் சாக்காக வைத்து, சூத்திரர் என்று குறிப்பிடப்படும் தாழ்த்தப்பட்ட, &–9