பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ைேத காட்டும் பாதை பிற்படுத்தப்பட்ட, கடையாய மக்கள் இனத்தை என்றென்றும் அடிமைச் சேற்றிலே அழுத்தி வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு நாடகம் ஆடியிருக்கிறான். துரியோதனாதியருக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த சண்டை வெறும் பங்காளிச் சண்டை! அதைப் பஞ்சாயத்து வைத்துத் தீர்த்திருக்க வேண்டும். அதற்கு மாறாகப் போர் செய்து முடித்து வைக்க நினைக்கிறான் கண்ணன். போர்க்களத்திலேயே ' உறவுக் குள்ளே போரா!' என மனச்சாட்சி யழுத்த மலைத்து நிற்கிறான் அர்ச்சுனன் - அர்ச்சுனன் தான் கொண்ட, விலங்குணர்வும் வெறியுணர்வும் மாறி, மனிதத் தன்மையை அடைந்த அந்த ஒரு கணத்தைப் பயன்படுத்தி யிருந்தால், போரையும், போரினால் ஏற்பட்ட கொலைகளையும், கொடுமைகளையும் தவிர்த் திருக்கலாம். அருள் உள்ளம் படைத்தவர்கள் அதைத் தான் செய்வார்கள். இரண்டு ஆடுகள் மோதிக் கொண்டால் வழி கின்ற குருதியைக் குடிக்கலாம் என்ற நிலையிலே உள்ள நரியைப் போல் கண்ணன் போர் செய்யத் தூண்டுகிறான்.