பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கீதை காட்டும் பாதை குலத் தொழிலை பலனை எதிர்பாராமல்பலன் - இல்லாவிட்டாலும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும், இந்தக் கர்மயோகமே சிறந்த பக்தி மார்க்கம் என்றும், இதற்கு வாழ்க்கையிலே பலன் இல்லா விட்டாலும் மோட்சத்திலே இடம் கிடைக்கும் என்றும் கீதை கூறுகிறது. பல இடங்களில் குழப்பமான கருத்துக்களைக் கூறும் கீதை, இந்தக் கருத்தை மட்டும் மிகத் தெளி வாகக் கூறுவது காணலாம். தொழிலைச் செய் பலனை எதிர்பாராமல் செய் என்றும் அடிமையாகவே பரம்பரை பரம்பரையாக அடிமையாக இரு. இது தான் கீதை கூறும் மொழி இதை மீறுபவனுக்கு மோட்சம் இல்லை; இறைவன் அருள் கிடைக்காது; அவன் நரகத்திலே தூக்கி எறியப்படுவான் என்பது பகவத் கீதையின் பயங்கரச் சட்டம். கண்ணன் தன்னைப் பெரிய - எல்லா சக்தி களும் கொண்ட கடவுள் என்று அறிவித்துக் கொண்டு இப்படிப்பட்ட படுபாதகமான ஒரு கருத்தைக் கீதையிலே கூறுகிறான்.