பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னன் விரித்த வலை 149 துன்பத்துக்கு ஒரு சிறு கூட்டத்தாரின் ஆசையே காரணம் என்பதை அறிந்தார். அந்த ஆசையைபேராசையை ஒழிக்க அவர் எல்லா வழிகளிலும் போராடினார். - வருணாசிரம ஏற்பாடு என்ற பெயரில் கண்ணன் விதைத்த விதை, இன்று பூதாகரமாக வளர்ந்து பதினாயிரம் சாதிகளையும், சாதிக்குள் சாதி யாகவும், அவற்றுக்குள் ஏற்றத் தாழ்வுகளாகவும் கிளைவிட்டுக் கொடி விட்டுத் தழைத்து வளர்ந்து விட்டது. இந்த நாட்டை உருப்படாமல் செய்யும் இந்த ஏற்பாட்டைத் தகர்த்தால் அன்றி நம் மக்கள் சிறிதும் முன்னேற முடியாது என்பது திண்ணம். சாதியை எதிர்த்துப் போராடும் அமைப்புகள் ஆயிரக்கணக்கில் நிறுவப்படவேண்டும். இடை விடாது தொடர்ந்து பணியாற்றினால் அன்றி, கண்ணனால் ஏற்பட்ட இந்தத் தீமையை முற்றிலும் ஒழிக்க முடியாது. இந்த மண்ணுலகை ஒரு சிலர்க்கு இன்ப புரியாகவும் பெரும்பாலான மக்களுக்கு மீளா நரக மாகவும் ஆக்குவதே கீதை காட்டும் பாதையாக அமைந்துள்ளது. நாடு முன்னேற, நாட்டு மக்கள் முன்னேற நாம் புதுப்பாதை அமைத்தாக வேண்டும்!