பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கீதை காட்டும் பாதை இந்த உலகில் உள்ள பொருள்கள் இரு வகையின. உயிருள்ளவை உயிர் அற்றவை உயிர் அற்றவை ஐந்து நிலையின. அவை நிலம், நீர், தீ, காற்று, வெளி என்பன. இவற்றிற்கு எனச் சில ஆற்றல்கள் இருப்பினும், தன்னறிவுடன் இவை செயல்பட இயலா நிலையில் உள்ளன. உயிருள்ள பொருள்கள் அனைத்தும் இந்த ஐந்து பொருள்களின் சேர்க்கையால் ஆனவையே. உயிருள்ள பொருள்களுக்கு அறிவு நிலைகள் ஐந்து. எல்லா உயிர்களையும் ஓரறிவு முதல் ஐந்து அறிவு வரை உடையன எனப் பிரிப்பர். புல் பூண்டு முதல் பறவை விலங்குகள் வரை இவையடங்கும். இவற்றிற்கெல்லாம் மேம்பட்ட பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவைப் பெற்றவன் மனிதன். சிந்தித்தலும், சிந்தித்துச் செயலாற்றுதலும் மனிதனுக்கு மட்டுமே அமைந்த சிறப்பு. சிந்தனை வளத்தால் மற்ற உயிர்களையும் உயிர் அல்லனவற்றையும் பயன் கொண்டு வாழும் பகுத்தறிவு பெற்றவனே முழுமையான மனிதன்,