பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகன் அருள்மணிமாலை என்ற எனது கீர்த்தனை நூலின் ளிெளியீட்டு விழாவின்போது டாக்டர் மு. வரதராசனர் அவர்கள் கூறிய மதிப்புரை திரு. ம. ப. பெரியசாமித்துரன் அவர்கள் நெடுங்கால மாகவே, நல்ல புதிய தமிழ் இசைப்பாடல்களைப் படைத் தளித்து வருகிருர்கள். அவர்களுடைய இசைப் பாடல்களே நூல்கள் வாயிலாகப் பல ஊர்களிலுள்ள அன்பர்கள் பயின்று வருகிரு.ர்கள். வானெலியில், பல பேரறிஞர்கள் எல்லாம் அவர்களுடைய இசைப்பாடல்களைப் பாடி, அதன்வழி நாட்டு மக்களுக்கு அவர்களுடைய பாடல்கள், நன் அறிமுகமாகியுள்ளன. இசைத்துறையில் மட்டுமின்றிக் கலைக்களஞ்சிய்த்தின் ஆசிரியராக இருந்து, புலவர் பெரு மக்களிடையிலும் அரும்பணி ஆற்றியுள்ளார்கள். நல்ல கடவுள் பக்தராகவும் விளங்கி வருகிரு.ர்கள். அறிவியல் துறையிலும் நல்ல ஈடுபாடு உடையவர்கள். இப்போது சிறுவர் கலைக்களஞ்சிய ஆசிரியராக இருந்து தொண்டாற்றி வருகிருர்கள். ஒருபுறம் உலகில் வளர்ந்து வருகின்ற அறிவியல் துறையிலும் ஈடுபாடு கொள்கிரு.ர்கள். மறுபுறம், நம் நாட்டுச் சான்ருேர்கள் வகுத்துச்சென்ற பக்திநெறி யிலும் ஈடுபாடு கொள்கிரு.ர்கள். அறிவியல் நெறிக்கும் பக்தி நெறிக்கும் முரண்பாடு இல்லையென்பது அவர்கள் கருத்தாகும். அவர்கள் பாடியுள்ள பாடல்களெல்லாம் எளிய சொற்களைக் கொண்டவை. ஆனல் ஆழ்ந்த உணர்ச்சி யைப் புலப்படுத்துவன. அவர்களின் நூல்களை நீங்கள் படித்துப் பார்ப்பீர்களானல், அவற்றைவிட எளிமையான தமிழில் எழுத முடியாது என்ற முடிவுக்கு வருவீர்கள். அதே நேரத்தில், அர்ைகளின் பாடல்கள், சிறந்த உர்ைச்சியைப் புலப்படுத்தி நிற்பவையாகும். எளிமையும் தெளிவும் கொண்ட பாடல்களை அவர்களின் படைப்புக்களில் காணலாம். மிக எளிய சொற்களை வைத்துக்சொண்டு, தம் உள்ளத்தில் உறையும் பக்தியைப் புலப்படுத்துகிருர்கள். பழநிமலை முருகனிடத்தில் அவர்களுக்குத் தனி ஈடுபாடு உண்டு, - - - - -