பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியன் முன்னுரை திருவுள்ளம் கனிந்து இறைவன் எனக்கு அருளிய பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சுவையான வரலாறு அல்லது திகழ்ச்சி உண்டு. இதுவரை .ெ வ ளி ய | ன கீர்த்தனே நூல்களான இசைமணி மஞ்சரி, முருகன் அருள் மணிமாலை முதலிய நூல்களிலும், இந்த நூலிலும் அடங்கி புள்ள பாடல்களே நான் இயற்றினேன் என்று என்றுமே நான் கருதுவதில்லை. இவற்றை இறைவன் எனக்கு அருளிய பாடல்கள் என்றுதான் நான் கொள்கிறேன். அந்த வரலாருே நிகழ்ச்சியோ உள்ளத்தில் ஊன்றிப் பதிந்து உள்ளத்தை நெகிழ்வித்து என் கண்களில் கண்ணிர் வடிந்த அளவுக்குப் பாடல்களின் சிறப்பு அமைந்துள்ளன. என்பதைமட்டும் கூறிக் கொள்கிறேன். ஒரு கீர்த்தனையின் இசை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இராகத்தில் எவ்வாறு அமையவேண்டும் என்று குறிப்பாகக் காட்டும் அளவிற்கு இறைவன் எனக்கு இசைஞானத்தை அருளியிருக்கிருன். நாளாக நாளாக இந்த ஞானம் வளர் வதையும் நான் அறிந்து வருகின்றேன். ஆளுல் ஸ்வரக் குறிப்பு எழுதி ஒரு கீர்த்தனையின் பல்லவி, அனுபல்லவி, சரணங்களில் சங்கதிகள் பலவற்றையும் சேர்த்து மெருகிட்டு உருவாக்க எனது குருநாதர் சங்கீத வித்வான் திரு. சிவராமகிருஷ்ண பாகவதர் அவர்களும், சங்கீத வித்வான் திரு. டி. கே. கோவிந்தராவ் அவர்களும் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிரு.ர்கள். எனது குருநாத ரிடத்தில் எனக்கு அளவுகடந்த மரியாதையும் அன்பும் உண்டு என்ருலும், அவரிடத்திலேயும் எனக்குப் பிடித்தமான மாறுதல்கள் பலவற்றையும் செய்யுமாறு சொல்லுவதில்