தனித்தொரு கவிவரிசை விரிவதை அடையாளம் காட்டியது. 1971 ல் வெளிவந்த கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் காதல் இளைஞர்கள் எல்லோரையும் கவிஞர்களாக மாற்றிய விசித்திரத்தைத் தமிழ்நாடு காணத் தந்தது. 1975 ல் வெளிவந்த ஊசிகள் கனவுச் சிறகுகளைக் கட்டி வைத்துவிட்டு சமுதாய நோய் முதல் நாடும் விமர்சன ஊசிகளாய் எங்கும் இறங்கின. கேலிப் பேச்சால் நகை நய வீச்சாய் ஊசிகள் தமிழ்ப் புதுக் கவிதைக்கு புது முகம் வரைந்து தந்தன. 'என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதை விடச் சமுதாய நடை பாதைகளைச் செப்பனிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்' என்ற கவிஞர் தம் முகவரிச் சீட்டுடன் வெளிவந்த ஊசிகள் புதுக்கவிதையின் அடிப்படை வெளியீட்டு மொழி எள்ளலும் கேலியும், அவை கிளத்தும் நகை நயந்த சமூவிமர்சனமும்தாம் என்பதை காதல் உணர்வுப் பெருக்கும் சமூக உணர்வுத் திளைப்பும் புதுத் தமிழ்க் கவிதையின் புது அகம் புதுப் புறம் என நேர்ப்பட உரைத்தன. இந்த இரு கவிதைத் தொகுதிகள். தம் தமிழ்ப் பார்வையாலும் சமூகப் பார்வையாலும் ஒரே நேரத்தில் பெருந்தொகையான வாசகர்களின் கவிஞராகவும் எண்ணற்ற இளங்கவிஞர்களின் ஆதர்சமாகவும் திகழ்ந்தவர் மீரா. தான் தடம் பதித்தும் பிறர் தடம் பதிக்க வழித்தடம் நல்கியும் கவிப்பணியாற்றிட அவர்தம் சொல்வலிவும் மனவலிவும் உதவின. நெடிய இடைவெளிக்குப் பின் இதோ கவிஞரின் இன்னொரு முகவரிச்சீட்டு 'குக்கூ'.
20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரன் கவிஞரின் தேர்ந்தெடுத்த சில கவிதைகளின் ஆங்கில மொழியாக்க நூலினை வெளியிட்டார். அப்பொழுது அதில் 'குக்கூ" என்ற பெயரில் சில குறும் பாடல்கள் இடம் பெற்றன. விரைவில் தனியொரு தொகுதியாக எல்லா குக்கூ வும் வர்ணமய மாலையாக வரும் என்றார் கவிஞர். ஆனால் என்ன காரணமோ, 'குக்கூ” பாட்டுக் கூடுகளை கவிஞர் வெகு நாட்களாகத் திறக்கவே இல்லை. கூடு திறந்து காற்றுப்பேறு பெற பட்டாம் பூச்சிகள் காத்துக் கிடப்பதைப்