உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ற வெளியீட்டுக்கு முன்னரே ஏற்கெனவே "ரிலிஸாகிவிட்ட முதற் பாட்டு தொட்டு ஒவ்வொரு பாட்டிலும் கவிஞரின் தனிப்பார்வை பளிச்சிடுகிறது. தமிழர்தம் அரசியல் பண்பாட்டுக் களங்களைத் தொட்டு நிற்கும் சில குக்கூகள்.

கோரப்புயல்
சாய்ந்தன
சரிந்தன
கோடிமரங்கள்
தப்பின
சில கொடி மரங்கள்.


என்று இயற்கை அழிவுக்கும் வாழும் துயருக்கும் இசைக்கப்படுகிறது ஒரு குக்கூ.

யாரோ வைத்த நெருப்பில்
ஏழைக் குடிசைகள் எரிந்தன;
வளரும் புகையில்
மாளிகை சில தெரிந்தன.

என்று 'எரிவதில் புது அர்த்தம் தெரியக் காட்டும் இன்னொரு குக்கூ. வாழ்வின் நகர் அடையாளங்களில் நலங்கள் காணாமல் போய்க் கொண்டிருப்பதைக் காட்டுகிறது ஒரு 'முக்காலடிக்கல்:

நகர்க்கரம் தீண்டும்
கிராமத்து வயல்களில்
கானோம் செந்நெல்
முளைத்துள்ள தெங்கும்
வெள்ளையடித்த
முக்காலடிக்கல்.

மீராவின் கவிதைகளுக்கு எப்போதும் வசீகரம் தருவது அவரின் புது நோக்குதான். வாழ்வின் ஒவ்வொரு சிறு

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/13&oldid=1233636" இலிருந்து மீள்விக்கப்பட்டது