இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தோளில் ஏறித்
தொற்றிக் கொண்டா
தோகை கன்னம் தொடுவது?
சூ மந்திரக்காளி...
நான் அந்தக் கிளியாகக் கடவது!
என்ற கேலியும் சரி
தேக்கடிக் கரையில்
துதிக்கையைத்
தூக்கிக்காட்டிக்
குட்டியிடத்தில் சொன்னது
யானை ஒன்று.
'அதோ பார்
படகில் மனிதர்கள்' என்று
என்ற அபூர்வப் புனைவும் சரி
காவல்நிலையம் அருகில்
மலர்ந்த பூக்கள்
விற்கும் இந்தப்
பூக்காரிகளின்
முகங்களைச்
செய்தது யார் சருகில்?
என்ற கோபம் சோகம் கலந்த வேதனைகளும் சரி நகலெடுக்க முடியாத தனிஆவர்த்தனங்கள். அவை தாகூர் சாகித்யம் போல் மீராவின் தனி சாகித்யம் எனலாம்.
பறவைகள் பேச்சைக்
கேட்டுக் கெட்டன
இலைகள், பாவம்...
பறக்க முடியாமல்
விழுந்து விட்டன.
போன்ற மூர்ச்சைகளிலும்
13