உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

வீணை ஒன்று
விழுந்து கிடந்தது காட்டில்;
விறகு வெட்டியின்
கண்ணில் பட்டது
வெந்து முடிந்தது வீட்டில்.


4


ஆடி வீதியில்
கடை பரப்பிக்
காலையும் பரப்பி
விற்கிறாள் ஒரு கிழம்
குவியல் குவியலாய்
அழுகல் மாம்பழம்.

24 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/25&oldid=1233654" இலிருந்து மீள்விக்கப்பட்டது