பக்கம்:குக்கூ.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

மார்கழி மாத விடியல்
குளித்து முடித்துக்
குங்குமப் பொட்டிட்டு
மலம் அள்ள வந்தாள்
தோட்டி மகள்.


6


கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற் காலையில்
கண்மூடிக் கிடக்கும்
ஊர்நாய் ஒரு மூலையில்,
இரவெல்லாம் குரைத்த அசதியில்.

மீரா ◯ 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/26&oldid=1233655" இலிருந்து மீள்விக்கப்பட்டது