இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19
கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி:
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்.
20
விழும்போதெல்லாம்
மீசையில் ஒட்டவேண்டும்
இந்தச் செம்மண்;
ஏனெனில் எம்மண்.
32 ◯ குக்கூ