இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21
இரவில்
அடுத்த வீட்டில்
பால்குடித்த அசதி,
பகலில் வந்து
படுக்கப் பூனைக்கு
என் வீட்டு மாடி வசதி.
22
விலகா தென்னைத்
தொடரும் விடாப் பிடியாய்...
செத்தால் தான்
தொலையுமா நிழல்
ஒரேயடியாய்.
மீரா ◯ 33