இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29
குழாயிலிருந்து
விழுந்தது தண்ணீர் கனமாய்
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுத்
தொட்டியில் விழுந்தேன்
அம்மணமாய்.....
30
ஆயிரம் ஈக்கள்
மொய்க்கும் ஆசையில்
வானத் தட்டில்
இராத்திரிக் கிழவி
சுட்டு வைத்த
ஒற்றைத் தோசையில்
மீரா ◯ 37