இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
உச்சி மலையில்
தவம் செய்தொரு மரம்
கேட்கும் வரம்....
சாலையில் நிற்க.
32
வாசலில் வந்து
மறந்து நின்று
மெளனமாய்த் திரும்பினாள்
பூக்காரி,
அவள் கவலை
யாரிடம் விற்பது?
அவன் கவலை
யாருக்கு வைப்பது?
38 ◯ குக்கூ