இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
63
நகர்க்கரம் தீண்டும்
கிராமத்து வயல்களில்
காணோம் செந்நெல்
முளைத்துள்ள தெங்கும்
வெள்ளையடித்த
முக்காலடிக்கல்.
64
தலையில் கனத்த
ஆனை மலைக்கல்
வயிற்றில் குழந்தை.....
போதாதென்று
போனஸ் சுமையாய்
கடுக்கும் காலில்
குத்தும் உடைமுள்.
54 குக்கூ