பக்கம்:குக்கூ.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
சிகரெட் புகையை
ஊதி ஊதித் தள்ளும்
எங்கள் ஊருக்கு வந்த
புதிய சிமெண்ட் ஆலை.


66

மரத்தின் அடியில்
சருகுக் குவியல் எரிந்தது;
பார்த்துக் கொண்டிருந்த
சலசல இலைகளுக்கு
அர்த்தம் புரிந்தது.


மீரா 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/56&oldid=1232901" இருந்து மீள்விக்கப்பட்டது