இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
77
தண்ணீர்க் குள்ளே
கிடக்கும் சிப்பி
ஒரு கண்ணிர்த் துளிக்காய்
நெஞ்சில் முத்துக்
காதல் நிரப்பி.
78
போதும் என்று
புறப்பட்டேன்
விடவில்லை சுலபத்தில்;
நீலமலை மேகங்கள்
பன்னீர் தெளித்தன
பேருந்தின் சன்னலோரம்
பயணம் செய்த என் முகத்தில்.