பக்கம்:குக்கூ.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


சர்க்கஸ் முடிந்த
மறுநாள் மாலையில்
தந்திக்கம்பியில்
குருவிகள் வரிசையாய்
இருப்பதைப் பார்த்து,
கோவணச் சிறுவர்கள்
குதுகலத்துடன்
தட்டுவார்கள் கைகள் சேர்த்து


80

பெட்டிக் கடைக்காரன்
சைக்கிளின் பின்னால்
கடத்தப்பட்ட
பனிப் பெண்
கண்ணிர் முத்தைச்
சிந்திக் கொண்டே போகிறாள்;
எதுவும் செய்யமுடியவில்லை என்னால்.

62 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/63&oldid=1233049" இருந்து மீள்விக்கப்பட்டது