இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
81
அரசியல் அப்பா
'தமிழ்' எனப் பெயர் வைத்து
அழைத்தார் அப்ப...
திரையில்
தமிழ் ஸ்ரீ
என்று அறிமுகமாகிறாள் மகள் இப்ப.
82
பழமை புதுமை
இரண்டுக்கும் நாங்கள் பாலம்
எலி வாகனம்
ஹெலிகாப்டர் வாகனம்
இரண்டையும் கொண்டாடும்
எங்கள் காலம்!
மீரா 63