உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'கனவு...களின் வசனம் பூவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியைப் போலிருந்தது.


'ஊசிகளின் வசனம் சமுதாய அங்கதம் என்ற அதன் நவில் பொருளுக்கேற்ப, சிறிதாக, கூராக, நஞ்சு தடவப்பட்டிருந்தது.

இப்போது 'குக்கூ'. இதுவும் முந்தைய தொகுதிகளிலிருந்து மாறுபட்டது.


ஹைகூ தமிழில் பிரபலமாகிப் பரவிக் கொண்டிருந்த போது மீரா, 'நானும் ஹைக்கூ எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த இலக்கணத்தை அப்படியே பின்பற்றவில்லை. பெயர் கூட குக்கூ என்று வைத்திருக்கிறேன் என்று என்னிடம் கூறி, ஒரிரண்டு கவிதைகளையும் சொன்னார்.


இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு 'குக்கூ' கூண்டிலிருந்து வெளியே வந்திருக்கிறது.


சிறிய வடிவம், படிமக் காட்சி, பிராணிகளின் செயல்கள் மூலமாக வாழ்வின் வினோதங்களை வெளிப்படுத்துவது, காட்சிகளில் வாழ்க்கைத் தத்துவத்தைத் தரிசித்தல் போன்ற ஹைகூவின் பண்புகள் 'குக்கூ'விலும் இருந்தாலும் வேறுபாடுகளும் உண்டு.


மூன்று வரி என்ற அடியளவை மீரா எடுத்துக் கொள்ளவில்லை. 'குக்கூவின் வரிகள் நவில் பொருளுக் கேற்பக் கூடுதலாகவோ, குறைவாகவோ அமைந்திருக்கின்றன.


மீராவின் மரபுத் தோய்வு குக்கூ'வில் அவரை இயைபுத் தொடையைக் கையாளச் செய்திருக்கிறது.


இந்த இயைபுத் தொடை சில இடங்களில் இயற்கையாய் அழகாய் அமைந்திருந்தாலும், பல இடங்களில் செயற்கையாகப்படுகிறது.

ஹைகூவில் புழு, பூச்சி, பறவை, விலங்குகளின் செயல்களைக் கூர்மையாகக் கவனித்து, அவற்றைச்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/7&oldid=1234012" இலிருந்து மீள்விக்கப்பட்டது