இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
95
கடன் கொடுக்கும்
கலையில் தேர்ந்த
அதிகாரிக்குப்
புயல் அறிவிப்பென்றால்போதும்
தென்றலாய் இதம்தரும் எப்போதும்!
96
விரிந்து பரந்த சமுத்திரம்
வீசலாம் வலை
விளையாடும் அலை
குடிக்க மட்டும்
கிடைப்பதில்லை
தண்ணீர் ஒரு திவலை.
70 குக்கூ