பக்கம்:குக்கூ.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

கருப்பண்ண சாமி கோயிவில்
வெட்டப்பட்ட
ஆட்டைப் பார்த்துக்
கால்கள் சேர்த்துக்
கட்டப்பட்ட கோழிகள்
தொண்டைக்-குழிக்குள்
தொடர்கதை எழுதும்.

98

பக்கத்து வீட்டுப்
பையனைப் பிடிக்கும்.
இதுவரைக்கும் அவன்
எனக்கு எழுதவில்லை
எந்தக் காதல் கடிதமும்
என் தமிழ் பிழைக்கும்.

மீரா 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/72&oldid=1233083" இருந்து மீள்விக்கப்பட்டது