பக்கம்:குக்கூ.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

இதயத்தில் என்ன விரிசல்
மோக மேகம்
முகம் திருப்பிப்போகும்
தாகத்துடன் காத்திருக்கும் கரிசல்.

104

இருட்டு நீரை
ஊற்றிவிட்டான்....ஒ
விரும்பிய மட்டும்
மணம் பரப்பும்
விடியல் பூ

74 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/75&oldid=1233088" இலிருந்து மீள்விக்கப்பட்டது