இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
105
சூரியன் மறைந்துவிட்டான்
என்று நீ
சோர்ந்து விழாதே;
சந்திரன் வரும்
நட்சத்திரங்கள் வரும்
வலைத்துப் பிடி விடாதே!
106
காற்று வரட்டுமென்று
சாளரம் திறந்தேன்
சந்தைக் கூட்டம்
மந்தைக் கூட்டம்
சரசரவென்று பாய்ந்தது பார்வையில்
ஐக்கியமாகிச்
சிட்டாய்ப் பறந்தேன்.
மீரா 75