பலவகை நூல்களை அன்னம் அகரம் வெளியிட்டது. ஒப்புக்கு அல்லது புத்தக வியாபாரத்துக்கு என இயந்திரத் தனமாக அச்சிடப்பட்டவை அல்ல அவை. சிந்தித்து சீர்தூக்கி, ஒரு திட்டத்தோடு வெளியிடப் பட்டவை. அவ்வெளியீடுகள் தமிழரின் பழந்தமிழர் மரபு மீட்சிக்கு உதவுபவை. தமிழர் நலம் பேணுபவை. இளைஞர்களை வழிநடத்துபவை. வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுபவை. அயல்மண்ணின் நல்ல கலையை, அறிவை நம் மக்களுக்குத் தேடித் தருபவை. தமிழர் உயர்வுக்குத் துணை நிற்பவை.
இப்படிப் புதிய, அரிய நூல்கள் வெளிவரக் காரணமான மீரா ஒர் அதிசயப்பதிப்பாளரே!
தன் எழுத்தும் தன் வாழ்வும் ஒன்று என்று வாழ்ந்தவர்களே மக்கள் எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகான உலக இலக்கிய வரலாறு காட்டும் தீரச் சித்திரங்கள் இவர்தம் முகங்களே! மக்கள் வாழ்வில் சிக்கலான தருணங்களில் இத்தகையோர் பேனா வலிமை மிக்கப் பேராயுதமாக மாறும்.
மீராவின் பேனா, எழுத்து இவ்வாறு பலமுறை. ஒரு கல்லூரியின் நல்ல தமிழாசிரியர் மீரா. கல்லூரியோ முன்னாள் சமஸ்தானம் நடத்துவது.
சிவகங்கைக் கல்லூரியில் ஒரு சிக்கல். ‘மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ என அரசை எதிர்த்து நின்றான் அந்தநாள் தமிழ்க்கவிஞன். அவனையொத்து கவிஞர் மீரா எழுதினார், பேசினார். ஆசிரியர்களை ஊர்மக்களை ஒன்று திரட்டினார், போராடினார். வருவாய்க்கு ஒரே வழியான ஆசிரியப் பணியைத் துறக்கவும் சித்தமாயிருந்தார். போராட்டம் தொடர்ந்தது. துரைத்தனம் செய்த சிங்கங்கள் பணிந்தன. சில ஆண்டுகளில் மன்னரின் அரச கல்லூரி மக்களின் அரசு கல்லூரி ஆயிற்று.
மீரா மதுரைக் காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர். அங்கே, ஆசிரியர்நலன், தமிழ்நாட்டுக்கல்வி முன்னேற்றம்