சிறப்புப் பூசை செய்யச் சொன்னார். பழக்கமில்லாத என்னைச் சாமி கும்பிடச் சொன்னார். அவர் பேரன்புக்குக் கட்டுப்பட்டுப் நான் வழிபட்டேன்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 'மூன்றும் ஆறும்' வெளிவந்தபோது, அதைப் படித்துவிட்டு (அப்போது அவர் சிதம்பரம் மளிகை மு.வேலாயுதம்) பரவசப்பட்டு மூன்று பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அன்றிலிருந்து திரு.மு.வே. வசப்பட்டேன்.
நேயராக இருந்து பிறகு என் நெருங்கிய சகோதரரான திரு.மு.வே. அவர்கள் எனக்கு எடுத்த மணிவிழா புத்தக உலகமே கொண்டாடிய மணிவிழாப் போலிருந்தது. சில தினங்களுக்கு முன் அறிவியல் மேதை அப்துல் கலாம் பெயர் குடியரசுத் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டதைக் கேட்டுப்புளகாங்கிதம் அடைந்ததைப் போன்ற உணர்வைப் பெற்றேன்.
மணிவிழா முடித்து வீட்டுக்கு வந்தோம். என் வீட்டு வாசலில் கவிஞர் சிதம்பரநாதனுடன், ஓம் சக்தித் தோழர்கள் ஆளுயர மாலைகளுடனும் சால்வைகளுடனும் நின்று கொண்டிருந்தார்கள். கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் கவிஞர் மாலைகளை அணிவித்து, சால்வைகளைப் போர்த்தி கெளரவித்தார். மறுநாள் அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று நல்ல விருந்தளித்தார்.
என்னைச் சிறப்பித்த திரு.மு.வே. அவருடைய துணைவியார் பெரிய நாயகி ஆச்சி மற்றும் குடும்பத்தினர் கவிஞர் சிதம்பரநாதன் அவருடைய துணைவியார் டாக்டர் சரோஜினி தேவி மற்றும் குடும்பத்தினர், வாழையடி வாழையென வரும் அவர்கள் பரம்பரையினர் எல்லாரும் எல்லாச் செல்வங்களுடனும் புகழ் ஒளியுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
மீரா
87