இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்ற படிமம் அழகாக இருப்பதோடு, சூரியத் தேரை இழுக்கும் ஏழு குதிரைகளின் தொன்மத்தை மீண்டும் பயன் பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுகிறது.
கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி:
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்றவைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்
என்ற கவிதையில் மனிதர்களின் குரூரம் மனம் துணுக்குறும்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.
நகைச் சுவையோடு எள்ளுவது மீராவுக்குக் கைவந்த சுவை.
பழமை புதுமை
இரண்டுக்கும் நாங்கள் பாலம்
எலி வாகனம்
ஹெலிகாப்டர் வாகனம்.
இரண்டையும் கொண்டாடும்
எங்கள் காலம்.
என்ற கவிதையில் இதைக் காணலாம்.
'குக்கூ' வின் தனித்தன்மை ஹைகூவைத் தமிழ்ப் படுத்தியிருப்பது.
'கனவுகள்.... போலவே இதுவும் ஒரு மரபைத் தொடங்கி வைக்கலாம்.
வால்மீகி நகர்
சென்னை.
அப்துல் ரகுமான்