பக்கம்:குஞ்சாலாடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 குஞ்சாலாடு பார்வதி பேசிமுடிக்கவில்லை. அதற்குள் இடியோசை போல சிரிப்பு வானத்தின் மூலைக்கு மூலே உருண்டது. கொடி வீசி கடமிடும் மின்னல் போல் ஒளிச்சாளரம் வானில் கீறுண்டது. தேவியர் திகைத்தனர். வாணி அருகில் கின்ற ருக்மணியிடம் அந்தப் பித்தர் சிரிக்கிருர் இப்படி! என்னவோடி யம்மா, இந்த மாதிரிக் கூப்பாட்டையும் கூத்தையும் கெளரி எப்படித்தான் சகித் துக்கொண்டிருக்காளோ! என்று முணமுணத்தாள். சிவகாமி குரலே உணர்ந்ததுமே மான்குட்டி போல் துள்ளி முன்னேறத் தொடங்கிவிட்டாள், மற்றவர்களும் பின்னல் விரைந்தனர்...... 'இதென்ன கொலு பொம்மைகள் உயிர்பெற்ற மாதிரி ....'என்று ஆரம்பித்தான் மனிதன். - திரும்பி கோக்கிய சிவன் அவன் மண்டையில் ஒரு தட்டுத் தட்டினர். அவன் வாய்திறப்பதற்குள் தேவியர் மின்னலாக ஒளிர்ந்து மூர்த்திகள் அருகில் கின்றனர், என்ன இங்கே கூட்டம்' என்று நெற்றியைச் சுழித் தாள் சிவகாமி. "யாரது! என் பக்தன் போல்...... என்று ஆரம்பித்த சரஸ்வதிக்கு ஷ்ஷ் என்று வாயடங்குச்சட்டம் போட் டார் பிரம்மா. - "ஓஹோ ஹோ!' என்று மனிதன் சிரித்ததும் எல் லோர் பார்வையும் அவன் மீது பதிந்தது. 'ஏன் அர்த்தமற்ற சிரிப்பு? என்று வெகுண்டார் சிவன், தன் பண்பை மறந்தவராய். 'எனக்கு தமிழ் சினிமாவில் பதிவிரதைகள் கதை களின் முடிவுக் காட்சி கினேவுக்கு வருகிறது. இங்கு உள்ளதைப்பார்த்ததும்' என்ருன் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/20&oldid=800279" இலிருந்து மீள்விக்கப்பட்டது