பக்கம்:குஞ்சாலாடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|- > கிருஷ்ண பிள்ளை உலகில் எவ்வளவோ குழந்தைகள் பிறக்கின்றன. எத்தனையோ சாகின்றன! என்ருலும் வாழ்க்கையின் லட்சியங்களை ஆணித்தரமாகக் காட்டும் சினனங்களுடன் பிறக்கும் சிசுக்கள் மிக அபூர்வம். அத்தகைய அபூர்வப் பிறவிகளின் பட்டியல் ஒன்று தயாரித்தால், அ தில் முக்கிய இடம் கிருஷ்ணபிள்ளேக்கு உண்டு. 'ஆரு கண்ணுக்கும் தெரியாத அரிச்சந்திரன் தாலிபாவிப் பறையன் கண்ணுக்குத் தெரியலாச்சே என்று பிற்காலத்தில் நாடகமேடை அயன் ஸ்திரி பார்ட் சந்திர மதி வேஷத்திலே ஒப்பாரிவைப்பதற்கு ஏற்றபடியாக பார்வையில் படாத மாயத்தாலியுடன் பிறந்த சந்திரமதி ......காதிலே குண்டலங்களுடன் பிறந்த கொடைவள்ளல் கர்ணன்-இப்படிப் பிரபலம் அடைந்த அதிசயப் பிறவி களின் குலமுறையிலே ஒருவராக உதித்தவர் கிருஷ்ண பிள்ளை. முந்தியவை எல்லாம் இலக்கியக் கற்பனேகள் என்று சொன்னலும் கூட, இலக்கியத்தையே கற்பிக்க வந்த கிருஷ்ண பிள்ளையைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. தனது வாழ்க்கை லட்சியம் சிரிப்பது தான் - உலகத்தைப் பார்த்து, மனிதர்களைப் பார்த்து, கடவுள்களேப் பார்த்து, எல்லாவற்றுக்கும் மேலாக தன்னையே பார்த்துச் சிரிப்பது தான் - என்று பிற்காலத்தில் ஒலிபரப்பிய கிருஷ்ண பிள்ளையின் லட்சியத்தை பிறவியிலேயே கூறும் சின்னங் கள் அவர் கூடவே பிறந்தன. அதாவது, கிருஷ்ண பிள்ளை பிறந்த அன்றே அவர் வாயில் இரு பற்களும் பிறந்திருந்தன. வானின் செக்க கிடையே நகவ8ளவு போல் சிரிக்கும் மூன்ரும் பிறை போல, சிவந்த உதடுகளின் பின்னல், வாய் நடுவில் இரண்டு பற்களும் சிரித்தன. பார்த்தவர்கள் பலவாறு அபிப்பிராயங்கள் உகுத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/26&oldid=800285" இலிருந்து மீள்விக்கப்பட்டது