பக்கம்:குஞ்சாலாடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 குஞ்சாலாடு எதாறால் என்ன ! சாப்பிட்டுவிட்டுப் போகிறவர்க ளின் மானம் கப்பல் ஏறும்படி'யாக நடுத்தெருவில் போகிறவர்களின் காதிலும் படும்படி 'ஒரு ஆள் எட்டணா" என்றும் இரண்டுபேர் ஓரணா' என்றும் அம்பலப் படுக் தும் கூச்சல் முறைதான் அந்த ஹோட்டலில் இருந்தது. மந்தியவனுக்கு பசியும் பணமும் இருந்திருக்கலாம். அந்த இரண்டு பேர் சும்மா மிஸ்சரை கொரித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி வயிற்றெரிச்சலை அவித்திருக் கலாம். அவர்களுக்கு எவ்வளவோ கவலை! அது யாருக்குத் தெரியும்? கணக்கு காதில் விழுந்ததும், ஒருவனை சாப் பாட்டுராமன் என்றும், மற்ற இருவரையும் வெறும்பயல் கள்' எனவும் கருதிவிட்டுப் போகிறான் தெருவில் நடப்பு வன், தாம்... இதையெல்லாம் ஹோட்டல்காரர்கள் சீர் தூக்கிக்கொண்டிருக்க முடியுமா என்ன! 'என்ன இருக்கி றது சூடா?' என்று கேட்டவருக்கு நெருப்பு இருக்கு கண கணன்து' எனக் கூறிவிட்டு உங்களுக்கு என்ன வேணும், ஸார்' என்று திரும்பினான், 'இட்ல இருக்கா?

  • நx களக் காலையில் இருக்கும். ஊம், அப்புறம்?' இந்த ரீதியில், உழைப்பில் அடிபட்டு இயந்திரமாகவே மாறிவிட வில்லை என்பதை நிரூபித்துக்கொண்டிருந்த அவனுக்கு நா ஓ காப்பி' என்ற ஆர்டர்' கிடைத்தது, அவன் பார்த்து விட்டு 'வே:தே ஒண்ணும் வேண்டாமா --தோசை, வடை, மிக்ஸ்சர்'. ஸ்வீட்...? ஒண்ணும் வேண்டாமா?...அலுப்பு விட்டது!' என்று முனங்கியபடி உள்ளே சென்றான்,

கை விரல்களால் நாலு செட் 'காப்பி'யை லாகவமாக எடுத்து வந்து மேஜையில் வைத்துவிட்டு ஒவ்வொரு செட் டாக எடுத்து திறமையுடன் ஆற்ற ஆரம்பித்த அவன் பார்வை மேழையருகில் சென்றது. காசு வாங்க அமர்ந்தி ருக்கும் மேஜையின் பக்கம் தான் மற்றவர்கள் பார்வையும் பநந்தது. அப்படிப் பாராதவர்களின் கவனத்தையும் சவரமுய ற்சிப்பது போல் எழுந்து விளையாடியது கலகல காதம், கைவளைகளின் கலீன் ஓசைக்கு ஆண்களின் &வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/32&oldid=1124266" இலிருந்து மீள்விக்கப்பட்டது