பக்கம்:குஞ்சாலாடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 குஞ்சாலாடு தண்ணியை மூஞ்சியிலே தெளிங்க' என்ருர் ஒருவர். விசிறுங்க ஸார், விசிறுங்க' என்று போதித்தார் ஒருவர். ஒரத்து மேஜை முன் இருந்தவர் அவசரடி அவசரமாக ஓடிவந்தார். காப்பி கொண்டு வாங்க ஸார். ஸ்டிமாங்கா இருக்கட்டும் என்ருர், ஸெர்வர் சும்மா கிற்கவே கொண்டு வாய்பா காசை என் பில்லிலே சேர்த்துப் போடு’ என்று கத்தினர் அவர். அவன் சென்று காப்பி கொண்டு வந்தான். வாங்கி ஆற்றிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவள் வாயில் ஊற் நிஞர். உள்ளே சென்ற ஒவ்வொரு மடக்குக் காப்பியும் அவளுக்கு உணர்ச்சி ஊட்டியது. அவள் கண்களைத் திறங் தாள். மெதுவாக எழுந்து உட்கார்க்தாள். சுற்றிலும் மிரட்சியுடன் நோக்கினுள். திடீரென வெட்கம் கொண்ட வள் போல் வேகம்ாக எழுந்து தலே கவிழ்ந்து கின்ருள். அவள் கை விரல்கள் காசை அவிழ்த்து எடுக்கச் சென் நன கானே கொடுத்துவிடுகிறேன்' என்று கூறி அவர் பணம் கொடுத்தார். அவளிடம் இப்பொழுது எப்படி யிருக்கு வீடெங்கே? இப்படி த னி யாக வரலாமா?? என்று பரிவுடன் விசாரித்தார் அவர். அவள் காணமுற் றது போல் விழிகளை ஏவி மீட்டு ஏதோ முனங்கினுள், தெளிவில்லாமலே, - - பாவம் இன்னும் மயக்கம் நன்கு தெளியவில்லை. ஒரு வண்டி பாருங்க ஸார், வீட்டிலே கொண்டுபோய்விட லாம் என்ருர் அந்தப் பரோபகாரி. அவர்கள் நகர்ந்தனர். இவ்வளவையும் மூவர் இருந்த இடத்திலிருந்தே கவ னிக்க, கிருஷ்ண பிள்ளே பதட்டமின்றி சாவதானமாக காப்பியைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். என்ன இது எனிப்படி என்று கேட்டனர் மூவரும் எல்லாம் பிஸினஸ் டிரிக் தான்' என்று கூறிச் சிரித்திார் "அப்படியென்ருல் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/34&oldid=800294" இலிருந்து மீள்விக்கப்பட்டது