பக்கம்:குஞ்சாலாடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 குஞ்சாலாடு மனித சமுதாய சேவை செய்வதாகக் கர்வங் கொண்டு திரிகின்ற அந்த அதிமனிதப் பிறவிகள்'தள்ளாடி நடந்த படி முன்னேறினர். ஸ்டேஷன் முன் கின்ற பிளஷர் கார் கள் மீது போய் விழுவது போல் கடந்தனர். சிலர் வழ வழப்பான பிளஷர் பாகங்களே அருமையாகத் தடவிய வண்ணம் என்ன இனிமை என்ன இனிமை!’ எ ன் று. சொக்கிப் போனர்கள், அழகிகளின் பட்டுடலே ஸ்பரிசித்து மகிழ்வது போல. அவர்களது பசி தீர்க்கும் இடங்களுக்கு அவர்களே அழைத்துச் செல்ல லாரி ஒன்று வந்தது. அவர் கள் ஏறியதும் வெறித்தனமாக உறுமியபடி. ஓடி மறைக் தி,தி: அந்தக் காட்சி கரைந்ததும் வேறு காடகத்தில் பதிக் தது வேடிக்கை பார்க்க வந்தவ்ர்களின் கவனம். கறுகறு வென அடர்ந்திருந்த புதிர் மீசையும், கில்லா டித்தனமான தலைப்பாகையும், மிருக வெறியுடன் கனன்ற கண்களும் உடைய முரடன் புருவேட்டை ஆடிக்கொண் டிருந்தான்! அவன் வலைக்குள் அகப்படாமல் ஒடி ஒடிப் பதுங்கிய புரு இரவில் சில வெறியர்களுக்கு இன்றியமை யாத் தேவை ஏற்பட்டு இடம் பொருள் முதலியவற்றை சட்டை செய்ய முடியாத அளவுக்கு கொதிக்கச்செய்கிற பசியை அடக்கப் பயன்படும் மாமிச பிண்டமாகும். ஆட் தள் கூடித் துருங்காமலும் பொழுது போகாமலும் தி! கின்ற அந்த இடத்திலே தினசரி அவளது வியாபாரம்' லாபகரமாகவே கடந்தது! அவள் அந்த முரடனக் கண்டு பயந்து ஒடுவதேன்? அவள் ஒளிந்து ஒளிந்து போலீஸ்காரர்கள் இருவர் பேசி நின்ற இடத்துக்கு வந்து சேர்ந்தாள். அவன் தடி பன். எனக்கு அவனைக் கண்டாலே பயமாயிருக்கு. அவனே விரட்டி விடுங்கள்’ என்று கெஞ்சிளுள், தூண்டில் பார்வைகள் எறிந்த வண்ணம். அவர்களோ அவளிடம் விளேயாட ஆரம்பித்தார்கள். ஆனக்கு இது சக ஐ ம் தானே. ஏன் வேஷம் போடுறே? என்ருன் ஒருவன். மற்றவனே பணம் தான் நிறையக் கிடைக்குமே!’ என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/46&oldid=800307" இலிருந்து மீள்விக்கப்பட்டது