பக்கம்:குஞ்சாலாடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநிசி நகரம் 41 அவன் தடிப்புண்ணி, ஏமாத்திப் போடுவான்' என்று ஆறி, ரகசியக்குரலில் ஆசைகாட்டினுள். அவர்கள் பிரிக் தார்கள். மோப்பம் பிடித்து அலேந்த முரடனே தனியாக அழைத்துச் சென்று என்னவோ சொன்னர்கள், பய முறுத்தினர்கள். வேறு என்ன செய்தார்களோ! சில கிமீ ஷங்களுக்குப் பிறகு அவன் ஆத்திரமாக சொல் அனல் சிதறியபடி கடந்து சென்ருன். அவன் மறையவே அந்த . இராப் பறவை வளையல்களைக் குலுக்கிக்கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி இருளில் மறைந்தது...... ஆண்டங்கள் அத்தனையும் கின்ருடத் தான் ஆடி? மகிழும் பிரானும், உலகெலாம் இன்புறத் தான் ஆவிலே மேல் யோகத் துயில் புரியும் காத்தம் கடவுளும் பெருமூச்சு எறிந்தனர். அம் மூச்சின் கொடுமை தாங்காமல் தானே என்னவோ வானகத்து மீன் ஒன்று விண்வீழ் கொள்ளி யாக உருகி உதிர்ந்தது, கண்ணே உறுத்தும் ஒளியுடன். இது உலகம்' என்று முனங்கினர் விஷ்ணு. 'இல்லே! உங்கள் சிருஷ்டிக்கோளாறு வாழ்க்கையின் ஒரு துளி. உலக கியதிக்கு ஒரு சிறு அணு' என்று குறுக்கிட்டார் கிருஷ்ன பிள்ளை 'உலகம் இந்த ரீதியில் தான் முன்னேறுகிறது. வாழ்க்கையின் அந்தரங்கத்தை சம்பிரதாயம் நாகரிகம் முதலிய திரைகளை நீக்கி விட்டு, ஊடுருவிப் பார்த்தால் புல்லாகிப் பூண்டாகிப் பல்விருட மாகிப் புழுவாகி மீளுய் மிருகமாய் மனிதனுகி என்று ஒரு பக்தர் பரிணும ஜாதகம் பாடினரே அந்த ரீதியில் வளர்ச்சி யுற்றிருக்தாலும் கூட சிருஷ்டியில் சிறப்பு இல்லை. சிருஷ்டி யின் சிகரமான மனிதகுலம் இன்னும் மிருக நினைவு மாருப் பிராயத்திலேயே இருக்கிறது...... அவர் வழவழி என்று புராணம் பரப்ப ஆரம்பித்ததும், அது குற்றச்சாட்டு களாக மீளுவதும் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. 'ஏய், கிறுத்தப்பா! சும்மா போட்டு கொரகொரான்னு வரட்டுத் தவளே மாதிரி...... ’ என்று மண்டையிலடித்தார் மிஸ்டர் சிவன், - சாந்தி-?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/47&oldid=800308" இலிருந்து மீள்விக்கப்பட்டது