பக்கம்:குஞ்சாலாடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 குஞ்சாலாடு அடுக்கிச் சென்ற புத்தகக்கற்றைகளேப் பார்த்துவிட்டுச் சொல்லவில்லை. புத்தகங்களுக்கு அப்பால் பட்ட ஞானமும் அனுபவமும் தான் அவள்படிக்க விரும்பியது என்பதை அவள் செயல் கிரூபித்தது நாகரிக தர்மாமீட்டராகத் திரிந்த குமாரி கனகாம்பரம்நவயுக தர்மங்களே கலாசாலைக் கன்னிகளுக்கே உரிய தனித்துவத்துடன் தறறுத தெளிக் தாள் என்பதை, ஒரு நாள் அவள் அந்த ஊரை விட்டு "அந்தர்த்தியானம் ஆனது அருமையாக விளக்கியது. அக்கரையுள்ளவர்கள் ஆராய்ச்சி செய்து பின்னர் கண்டுபிடித்த கதை இது: பள்ளிக்கூடம் போவதாகச் சொல்லி கனகா தினம் வீட்டை விட்டுக் கிளம்பியது என்னவோ உண்மை தான். நாள் தோறும் மாலேயிலே அவள் சரியான நேரத்துக்கு வீடு திரும்பியதும் அங்கீகாரம் பெற்ற விஷயமே. ஆனல் தினம் தவருமல் அவள் பள்ளிக்கூடத்தில் ஆஜராகவில்லை என்று புள்ளி விவரம பேசியது! சந்தேகம் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கம்பத்தகுந்த வட்டாரங்களிலும், கம்பத் தகுதியில்லாத நபர்களிடமும், விஷயம் அறிந்தவர் கள் மூலமும், விஷயமறியாதவர்களின் வதந்திகள் வாயிலா கவும் சேர்ந்த அபிப்பிராய அவியலேக் கிளறித் துருவிப் பார்த்ததன் பயணுக மகத்தான உண்மைகள் புலனுயின. கலாசாலை செல்லும் தளவாடங்களுட்ன் அழகு செய்து கிளம்பும் கன்னி இஷ்டமிருந்தால் கலாசர்ல்ே சென்ருள். கஷ்டமாகத் தோன்றிய நாட்களில் இஷ்டம் போல் சுதந்திரமாகப் பொழுது போக்கினுள். அவளுக்கு அதில் துணே புரிந்தவன் ஒரு மாணவன். ஆராய்ச்சியாளர் கள் சிறிது அதிகச் சிரமப் பட்டிருந்தால் அவன் பெயரை யும் அறிந்திருப்பார்கள். ஐயோ, பாவம்' என்ற தாராள கோக்குடன் வேண்டாமென விட்டுவிட்டார்கள். பார்க்கப் போளுல் பெயரில் என்ன இருக்கிறது!’ என்ற கருத்தில் அவர்களுக்கு அசையாத நம்பிக்கை. அவர்கள் நம்பிக்கை கிடக்கட்டும் எலலோரும கனகா கலாசாலே சென்று வருகிருள் என்று நம்பிக்கை கொண் டிருந்த வேளையிலே, சொல்லித் தெரிவது இல்லாக் கலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/50&oldid=800313" இலிருந்து மீள்விக்கப்பட்டது