பக்கம்:குஞ்சாலாடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 குஞ்சாலாடு லர்க்கே உரிய தனித் தமிழ் பாஷையில் - அவர்கள் தங் கள் அன்பையும் ஆசையையும் கொட்டியவர்கள் தான். அதற்கு சாட்சியாக பல கடிதங்கள் பின்னர் அக்ப்பட் டன. என்ருலும் கூட உண்மை வேறுவிதமாக ஆயிற்று. அஸ்கா போட்ட காப்பி என்று சொல்வி பனை வெல்லத் தைக் கரைத்து மற்றவர்களே ஏமாற்றி, தங்கள் பிஸினளை. வெற்றிகரமாக்கிக்கொள்ளும் சில ஹோட்டல் முதலாளி கள் போலவே அவனும் சுய லாபமே கருத்தாக வாழ்ந்தி ருக்கிருன். பிரகாசம் மிக்க எலெக்ட்ரிக் விளக்குகளும் அற்புதமான மேக்அப்'பும் காமிராவும் சேர்ந்து அதியற் புத சுந்தரியாக மின்னச் செய்கிற சினிமா சிங்காரியின் உண்மை லட்சணம் நேரிலே அவளேப் பார்ந்தால் அம்பல மாகி விடுவது போல், அவனது சுய ரூடம் தனியாக வந்த தும் தான் கனகாவுக்குப் பளிச்செனப் பட்டது. அவன் அவளே தவிக்கவிட்டு ஓடி மறைந்த பிறகுதான்! தன்னைத் தட்டிக் கழிக்க அவன் செய்த சூழ்ச்சி தானே ஊர் விட்டு ஊர் மாறித் தனி வாழ்வு தொடங்கும் திட்டம் என்ற ஐயம் கூட எழுந்தது அவள் உள்ளத்தில் 1 அவன் திறமையாகவே செயலாற்றியிருந்தான் ! அவ ளுக்குச் சந்தேகம் அணுவளவேனும் எழாத முறையில் கடந்து ஆசையை வளர்த்து வலையில் விழச்செய்து பின் கட்டாற்றிலே கைவிட்டு நழுவிய அவனே கடிப்புக் கலை வல்லுனன், சாதுர்ய மேதை என்று எவ்வளவு வேண்டு மாலுைம் பாராடடலாம. அவர்கள் நாகரிகம் அலைமோதும் அந்த நகரை அடைந்ததும் அவன் ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு அறை ஒன்று அமர்த்திக்கொண்டான். கடைசி இரவை - புது வாழ்வின் முதல் இரவு என்ற மகிழ்வில் திளைத் கிருந்த அவளுடன் மனேகரமாகக் கழித்தவன் அதிகாலை யில் அவள் விழிப்பதற்கு முக்தியே எழுந்து ஜாக்கிரதை யாக வெளியேறியவன்தான். ஒரேயடியாகக் கம்பி நீட்டி விட்டான்! அவள் ஆனந்த நினவுடன் எழுந்தாள். அவன் வரு வான் என்று காத்திருந்தாள். நேரம் ஆக ஆக அவளுக் குக் கவலே எழுந்தது. பின் பயம் வளர்ந்தது. அவளுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/52&oldid=800317" இலிருந்து மீள்விக்கப்பட்டது