பக்கம்:குஞ்சாலாடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குஞ்சாலாடு - - மேலும் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. அடுப்பில் காயும் தோசைக்கல்மீது பட்ட குளிர்ந்த நீரைப் போல துரு துருத்த அவர் 'அக்ரமம்' என்று துள்ளி எழுந்தார். -- ஐயோ, தயவு செய்து மௌனமாயிருங்கள். அல்லது வெளியே போய்விடலாம்' என்று . மன்றாடினான் அவர் அருகில் இருந்தவன், 'சரி' என்ற உறுமலுடன் பூமி அதிர நடந்தார். அந்த தாடிக்காரர். பின் சென்றான் மற்றவன். ! , சே! பூராவையும் பார்க்கவிடாமல் என்ன வேண்டிக் கிடக்கு ஆத்திரம்' என்று அலுத்துக்கொண்டு எழுந்தார் ஆடம்பரமாக ஆடை அணிந்திருந்த ஒருவர். 'ஊம் நமக்கு மட்டும் இங்கு என்ன வேலை? டே' என்று அருகிலிருந்த வேறே ஆசாமியையும் அழைத்துக்கொண்டு வெளியேறி னார் அவர். - இவ்வளவும் இருள் குறைந்து ஒளி வியாபிப்பதற்கு: முன்னரே நடந்துவிட்டது. கழுத்து வலி எடுக்கும்படியாக நீட்டிம் நெளித்தும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்வையை மறைக்கும்படி நடந்த அவர்களைக் கண்டு முனங்கினார்கள் ரசிகர்கள். அதைப்பற்றி அவர்களுக்கு என்ன ! வெளியே கல்ல நிலவு, நால்வரும் நடுத்தெருவில் வந்து இன்றனர், கோபமாக வெளியேறியவரின் போக்கு வெறிய னுடையதைப் போலிருந்தது. அவரது தாடியும் மீசையும் கண்களில் மின்னிய! அசாதாரண ஒளியும் பார்க்க அச்சம் தருவனவாகவே விளங்கின. கடுகடுத்த அவர் முகம் எள் தில் ஏற்றமுறும் அவர் பண்பைக் காட்டியது. நிலவொளி அவர் முகத்திலே படும்போது நெற்றி நடுவில் ஓர் வடுவை யும், கழுத்திலே பெருங் கறையையும் புலப்படுத்தும் - கவ னித்து நோக்கினால். அலங்கார ஆடை அணிந்தவர் உல்லாசச் சீமான் போல் தோற்றமளித்தார். அவர் சிரிக்கும்போது குறும் புத்தளந்தான் நெளிந்தது உதடுகளிலும், கண்களிலும் ' அவர்கூட வந்தவர் சாதுவான பேர்வழி. '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/8&oldid=1124265" இலிருந்து மீள்விக்கப்பட்டது