பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


நாயகருக்கு நீதிபதிகளாலும் சிறை அதிகாரிகளாலும் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு செய்திதாள் கிடைக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் விதி 3 (அ)வின்படி வெளியிடப்பட்ட அரசிதழ்களோ (ஆ) 2-வது பத்தியின்படி கொடுக்கப்பட வேண்டிய தந்திகளோ அந்தந்த சிறை கண்காணிப்பாளர் அல்லது சிறை அதிகாரி மூலம் அந்த 3 உறுப்பினர்களுக்கும் அனுப்பப் பெற்றிருக்க வேண்டும்,

ஆனால் வேலூர் மத்திய சிறையில் இருந்த திரு வி. கே. ராஜூ அவர்களுக்கு அரசிதழோ தந்தியோ அனுப்பப் பெறவில்லை என்பது உறுதி.

234 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்ட மன்றத்தில் ஒரு உறுப்பினர்க்கு ஒரு கூட்டத்தொடர் நடைபெறுவதையே அறிவிக்காமல் சட்டமன்றத்தை கூட்டுவது முறையாகாது. அவ்வாறு கூட்டிய கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின்படி முறையாக கூட்டப்படாத கூட்டம் ஆகும்:

அக்கூட்டம் சட்டப்படி செல்லுபடியாகாத கூட்டம். அக்கூட்டமே செல்லுபடியாகாத கூட்டம் என்றால் அக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகளோ தீர்மானங்களோ செல்லுபடி ஆகாதவை என்பதை சொல்லத் தேவையில்லை.

குடி-2