பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


"செயலாளர் உறுப்பினர்களுக்குத் தனித்தனி அழைப்பாணை அனுப்புவார்"-"கூட்டம் நடைபெறுவதற்கு முடிவெடுத்த நாளுக்கும் கூட்டம் கூட்டப்பட வேண்டிய நாளுக்கும் இடையிலான காலம், மிகக் குறுகியதாக இருப்பின் அத்தொடர் கூட்டம் தொடங்கப் பெறுவதை உறுப்பினர்களுக்கு அறிவித்து விடலாம்; அழைப்பாணைகள் செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தந்திகள் மூலம் செய்யப்படவேண்டும்."

அழைப்பாணை அடங்கிய பதிவு அஞ்சல் உறை, ஒர் உறுப்பினர்க்கும் பட்டுவாடா செய்யப்படாமல் போய்விடுமாயின், அவ்வுறுப்பினரோடு தொடர்பு கொள்ளத்தக்க அவரின் தற்கால முகவரி சட்டமன்ற செயலகத்தவரால் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அந்த முகவரிக்கு அழைப்பாணை அனுப்பப் பெற வேண்டும்.”

“The secretary issues summons to members individually. Where the interval is very short, members may be informed about the commencement of the Session and the issue of summons through press communique, over the radio and, by telegrams.

Where a registered cover containing the summons is. undelivered, efforts are made by the Secretariat to find out the current address at which ihe member could be eontacted and the summons is issued to that address.”

Page : 150

நம் பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும், அவற்றின் குழுக்களுக்கும் நம் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரம்,