பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


உரிமை சட்டக் காப்புரிமைகளை முறையை வகுத்துக் கூறும் அரசியல் சட்டத்தின் 105 மற்றும் 194 பிரிவுகளின் 3ஆம் பகுதியில் இவற்றில் கூறப்படாத அதிகாரம், உரிமைகள் தேவைப்படும்போதெல்லாம், உரிய சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். அதுவரை இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்து மக்களவை விதிகளே பின்பற்றப்பட வேண்டும் என வரையறுத்து வைத்தார்கள் அரசியல் சட்டத்தை வகுத்துத் தந்த ஆன்றோர்கள்.

இந்தியப் பாராளுமன்ற நடைமுறைக்கு வழிகாட்டியாக மேற்கொள்ள வேண்டிய ஒன்று என அரசியல் நிர்ணய சபை ஆன்றோர்களால் மதிக்கப்பட்ட, இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தின் வழிகாட்டி நூல் திருவாளர் எர்ஸ்கின்மே” என்பார் எழுதிய பாராளுமன்றத்தின் சட்டம், உரிமைகள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் என்ற நூலாகும்.

- (Erskine May's Treatise on The Law, Privileges Proceedings nnd usage of parliament)

அந்நூல், பாராளுமன்ற நிகழ்ச்சிகளில் உறுப்பினர்கள் பங்கு கொள்ள வேண்டிய உரிமை குறித்துப் பின் வருமாறு கூறுகிறது:

ஓர் உறுப்பினரை, அவையிலிருந்து வெளியேற்றும் ஆணை பிறப்பிப்பதற்கு முன்னர், அப்போது அவ்வுறுப்பினர் அவைக்கு வராதிருந்தால், அவைக்கு வந்து, அவர் இருக்கையில் இருந்து, தன்னுடைய

முறையீட்டினை எடுத்துக் கூற வாய்ப்பு அளிக்கும் வகையில் அவைக்கு வருமாறு உத்தரவு பிறப்பிப்பது வழக்கமாகும்.