பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16



பெற்றுக் கொண்டு, சட்டப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான-அழைப்பையும் பெற்றுக்கொண்டு வரும்வரை, அவர் சட்டப்பேரவை செயலகத்தோடு கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளலாம். பேரவைத் தலைவருக்கும் உரிமைக் குழு தலைவருக்கும் முறையீடு செய்து கொள்ளலாம். அக்கடிதப் போக்குவரத்தினை எந்த அதிகாரியும் தடுத்து நிறுத்தக்கூடாது. இந்தஉரிமை "அய்யோ பாவம்" எனக் கருதிக் கொடுத்த நீதி (Naturai Justice) அன்று. மாறாக, பேரவையில் தொடர்ந்திருக்கும் உறுப்பினர் என்ற உரிமையில் அரசியல் சட்டம், 194(3)ன் கீழ் உரிமை பெற்ற நீதி ஆகும்.

"இத்தீர்ப்பினை எடுத்துக் காட்டியதோடு இன்றைய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பே பின்பற்றத் தக்கதாம்" என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

(தண்டனை பெற்ற கைதிகளுக்கே இந்த உரிமைகள் இருக்கும் போது, குற்றம் சாட்டப் பெற்று, விசாரணையில் உள்ளவர்க்கு, அவ்வுரிமைகள் உண்டு என்பதில் ஐயமே இல்லை.)

மேலும், தண்டனை பெற்ற கைதியாகச் சிறையில் இருக்கும் ஒர் உறுப்பினர், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உரிமை மட்டும் அல்லாமல், சிறையில் இருந்தவாறே சட்டமன்ற உறுப்பினர் பணிகளை ஆற்றும் உரிமையும் உண்டு என்றுக் கூறி, அதற்கான உயர் நீதி மன்றத் தீர்ப்பு ஒன்றையும் எடுத்துக் காட்டியுள்ளார். திருவாளர் எம். என் கவுல் அவர்கள், "பாராளுமன்ற சட்டமன்றங்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும்" என்ற அவர் நூலின் 225, 226 பக்கங்களைக் காண்க. . சென்னை உயர்நீதி மன்றத்தின் இத்தீர்ப்பின் விளைவாக, தமிழ்நாடு அரசு, "சென்னைக் காவல் கைதிகள் விதிகள்.