பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20



இதே தீர்ப்பில், அவ்வாறு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்க்குச் சட்டமன்றம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும். சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்புகள் அவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

(Preventive Detentions Act)

(Maintenance of public order Act)

In a case before the Madras High Court, a member of the Madras Legislative Assembly, who was in detention under the Maintenance of Pnblic Order Act, when he received the summons for a session of the Madras Legislative Assembly, prayed to the court for the issue of a writ by way of mandamus or other appropriate writ to "declare and enforce his right to attend the sittings of Madras Legislative Assembly. (A. I. R. 1952 Madras 117).

Practice and proceedure of Parliament by M. N. Kaul, S. Lo Shakdher pages: 211

என அத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது காண்க.

ஆக சிறையில் எந்தச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சட்டமன்ற கூட்டத்திற்கான அழைப்பாணை அனுப்பப் பெற வேண்டியது இன்றியமையாதது. அது அவ்வுறுப்பினரின் உரிமை. அது அனுப்பாமல் நடைபெறும் சட்டமன்றக் கூட்டம் சட்டப்படி செல்லும்படியாகாத, திட்டமே ஆகும்.