பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24



நாள் சிறைத்தண்டனை விதித்து சிறையில் அடைத்து விட்டது. கேசவசிங், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. இதற்கிடையில் அவர் ஆறு நாள் சிறை தண்டனை அனுபவித்தும் விட்டார். உத்திரப்பிரதேச சட்டசபை அலகாபாத் உயர்நீதிமன்ற செயல் உரிமை மீறியதாகும் எனக் கொண்டு, கேசவசிங், அவர் வழக்கறிஞர், வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆகியோரைக் கைது செய்து கொண்டு வருமாறு தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம். சட்டமன்றத்தின் அச்செயற்பாட்டிற்குத் தடை விதித்து விட்டது. சட்டமன்றற்திற்கும், நீதிமன்றத்திற்கும் மோதல் வரவே, குடியரசுத் தலைவர், அரசியல் சட்டம் 143 பிரிவின் கீழ், இதில் உச்சநீதிமன்றத்தின் கருத்தறிய, உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம் ஒரு குடிமகனுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைக்கு ஊறு நேரும் போது, அவனுக்கு நீதிமன்றம் செல்ல அரசியல் சட்டம் அனுமதி அளித்துள்ளது. அடிப்படை உரிமைக்கும், சட்டமன்ற உரிமைக்கும் மோதல் வரும்போது, அடிப்படை உரிமையே முதல் இடம் பெறும். ஆகவே கேசவசிங் வழக்கை ஏற்றுக் கொண்ட அலகாபாத் நீதிமன்றச் செயல் முறையானதே எனத் தீர்ப்பு வழங்கி விட்டது.

உச்சநீதிமன்றத்து இத் தீர்ப்பை, திருவாளர் கவுல் அவர்களும் திருவாளர் ஷக்தர் அவர்களும், தம்முடைய நூலின் 232 வது பக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளனர். அது வருமாறு:

“The supreme court in its majority opinion held, that the powers and privileges conferred on State legisla