பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

"இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைக்கும் - சட்டமன்ற உரிமைக்கும் மோதல் வரும்போது, அடிப்படை உரிமைக்கே முதலிடம் உண்டு, அவ்வகையில் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டவர், சட்டமன்றத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கலாம், உயர் நீதிமன்றம் அவ்வழக்கை ஏற்றுக் கொள்ளலாம்," என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மாற்றப்படாமல் அப்படியே நிற்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்நிலையில், 1965 சனவரி 11, 12 தேதிகளில் பம்பாயில் கூடிய நாடாளுமன்ற சட்டமன்ற சபாநாயகர்களின் மாநாடு, உத்திரப்பிரதேச சட்டமன்றத்திற்கும்: அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தினை விரிவாக ஆராய்ந்து, அரசியல் சட்டம் 105, மற்றும் 194 பாராளு மன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் அவ்விரு சட்டங்களும் திருத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.

"The opinion of the supreme court was discussed by the conference of presiding officers of Legislative Bodies in India, held at Bombay on January 11 and 12, 1965. The conference unanimously adopted a resolution, expressing its view, that suitable amendments to Articles 105 and 194 should be made in order to make the intention of the constitution makers clear beyond doubt, so that the powers, privileges and immunities of Legislatures their members and committees could not in any case be construed as being snbject or subordinate to other articles of the constitution."