பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

அவ்வாறே கீழ்வரும் தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

"உச்சநீதிமன்றம் வழங்கிய கருத்து, பாராளுமன்ற சட்டமன்றங்களைத் தரத்தில் குறைந்த நீதிமன்ற நிலைக்குத் தள்ளிவிட்டதன் பயனாக, பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், தங்கள் பணிகளைத் திறமையாகவும், நியாயமாகவும், கண்ணியமாகவும் நிறைவேற்றத் தடையாகிவிடும். ஆதலின்

பாராளுமன்ற சட்டமன்றங்களுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும், அவற்றின் பல்வேறு குழுக்களுக்கும் உள்ள அதிகாரம் உரிமை, சட்டம் பாதுகாப்பு ஆகியன அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுக்கும் . கீழ்ப்பட்டதாகவோ அவற்றால் நடவடிக்கை எடுக்கக்கூடியதாகவோ இருத்தல் கூடாது என்று, அரசியல் சட்டத்தை உருவாக்கியவரின் நோக்கம் ஐயத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நிலைநாட்டும் வகையில் அரசியல் சட்டம் 105 மற்றும் 194க்கும் பொருத்தமான திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

“Whereas the opinion of the supreme court has reduced legislatures to the status of inferior courts and has implications that would deter the legislatures from discharging their functions efficiently, honestly and with dignity.

Now therefore this conference consideres that suitable amendments to articles 105 and 194 should be made in order to make the intention of the constitution makers clear beyond doubt. So that the powers, privileges and immunities of legislatures their members and Committees.